மொழிப் பெயர்ப்பு உதவிப் பக்கங்கள்..

Monday, August 28, 2006

KBabel - முகவுரை..

மொழிப் பெயர்ப்புக்காக பயன் படுத்தப் படும் பல செயலிகளுள் KBabel-ம் ஒன்று. இதல் பல வசதிகள் சுலபமாக செய்து தரப்பட்டுள்ளன..

PO கோப்புகளை அதிக வசதிகளுடன், எளிமையான முறையில் கையாள KBabel நமக்கு உதவுகிறது. PO கோப்புகளை திறம்பட தொகுத்து நிர்வகிக்க இதில் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

முழுமையாக உலவும் திறன், திறம்பட தொகுக்கும் ஆற்றல், தேடுவதற்க்கு சுலபமான வழிமுறைகள் முதலியன இதன் சிறப்பம்சமாகும்.

நாம் பயன் படுத்தும் PO கோப்புகளை தொகுத்து எளிமையாக Catalog Manager வழங்குகிறது.

தன்னிச்சையான மொழிபெயர்ப்புகளை கையாள நமக்கு KBabeldict உதவுகிறது. மொத்தத்தில் ஒரு நிலையான மொழிபெயர்ப்பினை வழங்க KBabel நமக்கு துணை புரிகிறது.